ETV Bharat / state

தடைசெய்யப்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்கள் உணவு வழங்கத் தடை - corona updates

சென்னை: கரோனா உறுதிசெய்யப்பட்ட நபர்கள் வசித்த, தடைசெய்யப்பட்ட பகுதிகளைச் சுற்றி 2 கி.மீ. சுற்றளவுக்கு உணவு வழங்குவது முற்றிலும் தடைசெய்யப்பட்டது.

தடைசெய்யப்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்கள் உணவு வழங்க தடை

author img

By

Published : Apr 21, 2020, 10:12 AM IST

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி உணவுப் பற்றாக்குறையிலுள்ளவர்களுக்கு உணவு வழங்கிவருகின்றனர்.

தற்போது, சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சென்னை மாநகராட்சியால் தடைசெய்யப்பட்ட பகுதிகளான அரசு பொது மருத்துவமனைகள், மாநகராட்சி சுகாதார மையங்கள், கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பரிசோதனை மையங்கள், பெருந்தொற்று நோய் சிகிச்சை வழங்க அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் போன்ற பகுதிகளுக்கு அருகில் உள்ள இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள்பட்ட இடங்களில் உணவு வழங்குவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

தன்னார்வலர்கள், அரசு சாரா அமைப்புகளுக்கான நிபந்தனைகள்

• சென்னை மாநகராட்சியால் தடைசெய்யப்பட்ட பகுதிகள் ஆபத்தான பகுதிகள். ஆதலால் அப்பகுதிகளைச் சுற்றி 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள்பட்ட இடங்களில் உணவு வழங்குவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது

• மேற்கண்ட தடைசெய்யப்பட்ட பகுதிகளில் உணவு வழங்க வேண்டுமென்றால், சென்னை மாநகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிடங்குகளில் உணவுப்பொருள்களை அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அவ்விதம் பெறப்பட்ட உணவுப்பொருள்கள் முறையாக, உணவு பரிசோதனை மேற்கொண்ட பின் மாநகராட்சி மூலம் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும்.

• உணவு, உதவிப் பொருள்கள் வழங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக சென்னை மாநகராட்சி சம்பந்தப்பட்ட மண்டல அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். உணவு வழங்கும் இடம், இதர விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

•மண்டல அலுவலர் உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் உணவு வழங்கும் இடத்தை ஆய்வுசெய்வது, உணவு வழங்க உகந்த இடமா எனக் கண்டறிந்த, பின்னர்தான் உணவு வழங்க வேண்டும்.

• எந்த மண்டலத்திற்குள்பட்ட இடத்தில் உணவு வழங்க இருக்கிறார்களோ, அந்த மண்டல எல்லைக்குள்பட்ட இடத்திலேயே உணவு தயாரிக்க வேண்டும்.

• அரசால் தடைசெய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட எல்லைக்குள்பட்ட இடத்தில் உணவு வழங்கக் கூடாது.

• தயாரிக்கப்பட்ட உணவை குறிப்பிட்ட நேரத்துக்குள் அமைப்பாளர்கள் வழங்கி முடிக்க வேண்டும்.

• உணவு வழங்கும் இடத்தில் ஓட்டுநர் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி தன்னார்வ அமைப்பு, அரசு சாரா அமைப்புகள் உறவினர்கள் உள்ளிட்ட மூன்று நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

• உணவுப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் வாகனத்தில் மூன்று நபர்கள் மேல் பயணிக்கக் கூடாது.

• உணவு வழங்கும்போது தனிநபர் இடைவெளியைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளுடன் அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி உணவு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு, சென்னை மாநகராட்சி ஆகியவற்றால் உணவு வழங்குதல் குறித்து அவ்வப்போது விதிக்கப்படும் நிபந்தனைகளை, உணவு வழங்கவுள்ள அமைப்பாளர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஊரடங்கால் கேள்விக்குறியாகும் காலணி தைப்பவர்களின் வாழ்வாதாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.