ETV Bharat / state

வீட்டு வாடகை வசூலிக்கத் தடை கோரிய வழக்கு தள்ளுபடி! - MHC order

சென்னை: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வீட்டின் உரிமையாளர்கள் வீட்டு வாடகையை வசூலிக்கத் தடைவிதிக்க  அரசாணை பிறப்பிக்க கோரிய மனுவை, மனுதாரர் திரும்பப் பெற்றதால், அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Restrain to collect House rent case, dismissed as withdrawn, MHC order

author img

By

Published : Aug 4, 2020, 6:01 PM IST

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'கரோனா தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு, குடியிருப்புவாசிகளிடம் இருந்து நிலம் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு வாடகை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மார்ச் 29ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை பின்பற்றி தமிழ்நாடு அரசும் பேரிடர் மேலாண்மைச் சட்டம்; அவசர கால, பெருந்தொற்று நோய்த் தடுப்புச் சட்டத்தின் கீழ், வாடகை வசூல் செய்வதற்குத் தடை விதித்து அரசாணை வெளியிட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணை வெளியிட்ட சமயத்தில் 15 நாள்கள் வரையிலேயே, ஊரடங்கு அமலில் இருந்தது. இப்போது, ஊரடங்கு காலம் 60 நாள்களுக்கும் மேலாக நீட்டிக்கப்பட்டுள்ளதால், மூன்று மாதத்திற்கு வாடகை வசூலிக்கக் கூடாது என்று வீடு மற்றும் நில உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அமர்வில் நேற்று(ஆகஸ்ட் 3) விசாரணைக்கு வந்தபோது, இதே போல தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் வாடகைதாரரோ? வீட்டு உரிமையாளரோ? யாரும் வழக்குத் தொடரவில்லை என்று தெரிவித்ததுடன், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.