ETV Bharat / state

'பொதுக்குழுவில் கொண்டுவரப்படும் தீர்மானங்களுக்கு கண்டிப்பாக ஒருங்கிணைப்பாளர் கையெழுத்துப்போட வேண்டும்' - OPS Press meet

பொதுக்குழுவில் கொண்டுவரப்படும் தீர்மானங்களுக்கு கண்டிப்பாக ஒருங்கிணைப்பாளர் கையெழுத்துப் போட வேண்டும் என அதிமுகவின் மூத்த நிர்வாகி பொன்னையன் தெரிவித்துள்ளார்.

பொதுக்குழுவில் கொண்டுவரப்படும் தீர்மானங்களுக்கு கண்டிப்பாக ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து போட வேண்டும் - பொன்னையன்

author img

By

Published : Jun 17, 2022, 10:12 PM IST

சென்னை: வருகிற ஜூன் 23 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்னையன், "அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து ஒன்றுமே விவாதிக்கவில்லை. ஒற்றைத் தலைமை குறித்து இரண்டு பேரிடம் கேளுங்கள்.

ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுப்பது என்பது உண்மை இல்லை. ஓபிஎஸ் நாளைக்கு மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது எனக்குத் தெரியாது. ஒற்றைத் தலைமை குறித்து கட்சியின் தலைமை மற்றும் பொதுக்குழு முடிவு செய்யும். 100 க்கு 1000 விழுக்காடு, அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். பொதுக்குழுவில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை ஜூன் 23ஆம் தேதி வெளியிடுவோம்.

ஒற்றை தலைமைக்கான தீர்மானம் இருக்கிறதா, இல்லையா என்பது பொதுக்குழுவில் தெரிய வரும். உட்கட்சி தேர்தல் முடிவுக்கும் ஒற்றைத்தலைமைக்கும் எந்த தொடர்பும் இல்லை. கட்சியில் ஒற்றைத்தலைமை எடுப்பது எந்த காலத்திலும் தவறில்லை. ஆனால், ஒற்றைத் தலைமை குறித்த முடிவை பொதுக்குழு எடுக்கும். பொதுக்குழு சிறப்பு அழைப்பாளர்களுக்கு இன்னும் அழைப்பு விடுக்கவில்லை.

பொதுக்குழுவில் கொண்டுவரப்படும் தீர்மானங்களுக்கு கண்டிப்பாக ஒருங்கிணைப்பாளர் கையெழுத்துப் போட வேண்டும். பொதுச்செயலாளர் பதவி மீண்டும் தேர்வு செய்யப்படுவது கற்பனையே; அதற்கு நான் பதில் கூறமுடியாது. நாளைய தினம் பொதுக்குழுவின் தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு, இறுதி வடிவம் கொடுக்க இருக்கிறோம். தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர்களுக்கு அழைப்பு விடுப்போம்" எனத் தெரிவித்தார்.

பொதுக்குழுவில் கொண்டுவரப்படும் தீர்மானங்களுக்கு கண்டிப்பாக ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து போட வேண்டும் - பொன்னையன்

இதையும் படிங்க: ஒற்றைத்தலைமை ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் - ஓ.பன்னீர்செல்வம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.