தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார். இதற்குத் தமிழ்நாட்டில் திமுக தோழமை கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளரிடம் பேசுகையில், “தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தை ராகுல் காந்தி சார்பாக மனதார வரவேற்கிறோம். குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் மனதார வரவேற்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம் இந்துக்களுக்கு மட்டும்தான் இந்த நாட்டில் இடம் உண்டு என்பதைக் குறிக்கிறது. தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள இந்தத் தீர்மானத்திற்கு மத்திய அரசு உடனடியாகச் செவிசாய்த்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்” என்றார்.