சென்னை: இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அரசுப் பணிகளில் நியமனங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுவரும் நிலையில் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து எந்தத் தகவலும் இடம்பெறவில்லை.
தற்போது தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெருகிவருகின்றன. தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும்விதமாக வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது.
அரசின் பயன்கள் பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கும் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தனியார் நிறுவனங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.