ETV Bharat / state

தீனதயாள் உபாத்தியாயா பெயரில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி இருக்கை - ஆர்எஸ்எஸ் பற்றாளர் தீனதயாள் உபாத்தியாயா

ஆர்எஸ்எஸ் பற்றாளர் தீனதயாள் உபாத்தியாயா பெயரில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி இருக்கை அமைக்கப்பட்டு, தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவான கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி இருக்கை
ஆராய்ச்சி இருக்கை
author img

By

Published : Jan 26, 2022, 6:15 PM IST

சென்னை: ஆர்எஸ்எஸ், பாஜகவின் முன்னோடி தலைவர் தீனதயாள் உபாத்தியாயா பெயரில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

தீனதயாள் உபாத்தியாயாவின் கொள்கைகளை சமூகத்திற்கு கொண்டு செல்லவும் அவருடைய கொள்கைகள் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு இருக்கை தொடங்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி இருக்கை
ஆராய்ச்சி இருக்கை

ஆராய்ச்சி இருக்கை

அதன் பின்னர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக தேசிய அளவிலான கருத்தரங்கை ஆன்லைன் மூலமாக நடத்தியுள்ளது.

மேலும் தீனதாயள் உபாத்தியாயாவின் நினைவு நாளில் பாரதத்திற்கு தீனதயாள் உபாத்தியாயாவின் பங்களிப்பு குறித்தும் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி இருக்கை
ஆராய்ச்சி இருக்கை

தீனதயாள் உபாத்தியாயா இருக்கையின் தலைவர் தர்மலிங்கம் மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் செய்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து கருத்தரங்கை நடத்தியுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் ஜுன் 14 - ஜுலை 15 வரை தேர்வுகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.