ETV Bharat / state

400 ஆண்டுகள் பழமையான சேதுபதி வம்ச ஐம்பொன் பெண் சிலை மீட்பு! - Aimbon female statue

400 ஆண்டுகள் பழமையான சேதுபதி வம்ச ஐம்பொன் பெண் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

400 ஆண்டுகள் பழமையான சேதுபதி வம்ச ஐம்பொன் பெண் சிலை மீட்பு!

author img

By

Published : Aug 6, 2022, 8:21 AM IST

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு, 400 ஆண்டுகள் பழமையான பெண் சிலை ஒன்று தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகராஜ் மற்றும் குமரவேல் ஆகிய இருவரிடம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து சிலையை வாங்குபவர்கள் போல, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அவர்களிடம் பேசியுள்ளனர்.

கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பின்னரே சிலை கடத்தல் காவல்துறையினரை, கடத்தல் கும்பல் நம்பியுள்ளனர். அதன் பின்னர் இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், திருச்சியைச் சேர்ந்த முஸ்தபா என்பவரை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவர்களிடம் சிலை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிலைக்கு இரண்டு கோடியே 30 லட்சம் ரூபாய் விலை பேசப்பட்டுள்ளது.

400 ஆண்டுகள் பழமையான சேதுபதி வம்ச ஐம்பொன் பெண் சிலை மீட்பு!
400 ஆண்டுகள் பழமையான சேதுபதி வம்ச ஐம்பொன் பெண் சிலை மீட்பு!

பின்னர், சுமார் 400 வருடம் பழமையான ஐம்பொன் பெண் சிலையுடன் முஸ்தபா உட்பட மூன்று பேர் பழைய திருச்சி ரோடு அருகே வந்தபோது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சிலையானது, சிவகங்கையைச் சேர்ந்த செல்வகுமாரின் தந்தை நாகராஜன் என்பவர் குறி சொல்லும் வேலை பார்த்து வந்ததாகவும், அப்போது கருவாட்டு வியாபாரி ஒருவர், தென்னை மரத்தில் இந்த சிலையை கட்டி வைத்திருந்ததை பார்த்து தனது தந்தை எடுத்து வந்ததாக கூறியிருக்கிறார்.

தொடர்ந்து மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், நான்கு நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சிலை கடத்தல் கும்பலுக்கு பின்னால் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்தும், இந்த சிலை எந்த கோயிலுக்குச் சொந்தமுடையது எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்படவிருந்த உலோக சிலைகள் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.