சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் பாவேந்தர் பாரதிதாசனின் பேரன் கவிஞர் புதுவை கோ.செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
அப்போது தமிழ் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் பணிகளுக்காக, அவர் நன்றி தெரிவித்தார்.
பாரதிதாசனை கௌரவிக்க அறிவிப்புகள் வெளியீடு?
சந்திப்புக்குப் பின்னர் கவிஞர் புதுவை கோ.செல்வம் பேசுகையில், ”கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பெரியார் மற்றும் அண்ணாவை போன்று உயர்ந்த இடத்தில் வைத்து பாராட்டியுள்ளார் ஸ்டாலின்.
தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட பாரதியார் போன்ற தமிழ் அறிஞர்களை கௌரவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. அதேபோன்று பாவேந்தர் பாரதிதாசனை கௌரவிக்கும் வகையிலான அறிவிப்புகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தேன்.
மேலும் பாவேந்தர், தமிழ் வளர்ச்சி தொடர்பான பணிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: பாம்பன் புதிய பாலம் பணிகள் எப்போது நிறைவடையும்? - அமைச்சர் பதில்