ETV Bharat / state

சுயநிதி பள்ளிகள் இயக்குநரகம் உருவாக்க முதலமைச்சருக்கு கோரிக்கை! - Chief Minister mk stalin

அனைத்து வகை தனியார் பள்ளிகளையும் ஒருங்கிணைத்து, ஒரே இயக்குநரின் கீழ் சுயநிதி பள்ளிகள் இயக்குநரகம் உருவாக்கிட போட்ட அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியார் பள்ளி
தனியார் பள்ளி
author img

By

Published : Jun 14, 2021, 2:48 AM IST

சென்னை: தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார், முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், ’தமிழ்நாட்டில் சுயநிதி அடிப்படையில் மாநில அரசின் பெரும் பண சுமையையும், பணி சுமையையும் குறைத்து பலருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளது. பல கோடிக்கணக்கான மாணவர்களுக்கு தரமான கல்வி அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் நர்சரி, பிரைமரி,மெட்ரிக், மேல்நிலை, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், ஐசிஎஸ்இ பள்ளிகள் , கேம்பிரிட்ஜ் பள்ளிகள், ஐ.பி. பள்ளிகள், சுயநிதி அடிப்படையிலான உயர்நிலை மேல்நிலை பள்ளிகள் முறையே சுமார் 20 ஆயிரம் பள்ளிகள், 50 ஆயிரம் பள்ளி வாகனங்கள் இயங்கிவருகின்றன.

பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் என பள்ளிகளின் அங்கீகாரம், கல்விக்கட்டணம் நிர்ணயித்தல், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் வழங்குதல், உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல தேவைகளுக்கு நாங்கள் ஒவ்வொரு அலுவலகத்திற்கு அலைய வேண்டி வருகிறது.

தனியார் பள்ளிகளை கண்காணித்து நல்வழி காட்ட ஒரே சுயநிதி பள்ளிகளுக்கான இயக்குநரகம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதற்காக ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பங்குத் தொகையை சுமார் 1000 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்குச் செலுத்தியுள்ளோம்.

அதனடிப்படையில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தனியார் பள்ளிகள் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு 19 மாதங்களாகியும், இன்னும் அரசாணை செயல்பாட்டுக்கு வரவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தனியார் சுயநிதி பள்ளிகளுக்கான சுயநிதி பள்ளிகள் இயக்குநரகம் அமைப்பதற்காக போடப்பட்டுள்ள அரசாணையை அமல்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வி ஆணையாளர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான ஆணைகளைப் பிறப்பித்து, தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் இன்னும் மிகச் சிறப்பாக செயல்பட உதவ கோருகிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.