ETV Bharat / state

பரமக்குடி டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை! - சென்னை அண்மைச் செய்திகள்

சென்னை : கரோனா தொற்றுப் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களை இழிவுபடுத்திய பரமக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுத்திட சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பரமக்குடி டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

author img

By

Published : Apr 30, 2021, 9:51 AM IST

பரமக்குடி அரசு கலைக் கல்லூரி தற்போது தற்காலிக கோவிட் கேர் மையமாக மாற்றப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து இளம் மருத்துவர்கள் அங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கான தங்கும் இடம், உணவு உள்ளிட்ட இதர வசதிகள் செய்து தரப்படவில்லை. கரோனாவிலிருந்து மக்களை காக்க வேண்டும் என்ற உணர்வோடு பல மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கோவிட் கேர் மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து நேற்று (ஏப்.28) இரவு எட்டு மணியளவில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் பார்வையிட்டு வெளியேறியுள்ளார். அப்போது புதிதாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரண்டு இளம் மருத்துவர்கள் பற்பசை, சோப்பு போன்றவற்றை வாங்க அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த பரமக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்களை மிரட்டியுள்ளார். இறுதியில் வாக்குவாதம் முற்றியதால் இரண்டு மருத்துவர்களையும் காவல்துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நள்ளிரவு வரை பல இடங்களில் சுற்றியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பொதுச் செயலாளர் இரவீந்திரநாத், "காவல் நிலையத்திற்கோ நீதிமன்றத்திற்கோ இளம் மருத்துவர்களை அழைத்துச் செல்லவில்லை. பல மணி நேர முயற்சிக்குப் பின்னரே துணை காவல் கண்காணிப்பாளரிடம் இருந்து இளம் மருத்துவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்றபோது துணை காவல் கண்காணிப்பாளர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் காவல் துறை அலுவலரின் நடவடிக்கையால் இளம் மருத்துவர்கள் மன அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த காவல் அலுவலர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். கரோனா பணியில் ஈடுபடும் அனைத்து மருத்துவர்களுக்கும் தனியான தங்கும் வசதி, உணவு வசதி செய்து தரப்பட வேண்டும். மருத்துவர்களுக்குப் பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க : முடிந்ததை முயற்சியுங்கள் மோடி, அமித்ஷா - சித்தார்த்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.