ETV Bharat / state

பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளிவைக்க கோரிக்கை - ஜாக்டோ- ஜியோ அமைப்பு - jakto - geo

சென்னை : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறக்கும் தேதியை தள்ளிவைக்க ஜாக்டோ- ஜியோ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஜாக்டோ- ஜியோ அமைப்பு
author img

By

Published : May 28, 2019, 6:58 PM IST

சென்னையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தாஸ், அன்பரசு ஆகியோர் செய்தியாளர்களை சந்திக்கையில், 'மக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களுக்கு எங்களது அமைப்பு சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் தேர்தலில் ஜனநாயகக் கடமையை முழுமையாக ஆற்றிய அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட எட்டாயிரம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது வழக்குகள் போடப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளினால் அவர்கள் பணப்பயன், பதவி உயர்வு, பணிமாறுதல் போன்ற சலுகைகள் பெறுவதில் சிக்கல் உள்ளது.

பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க கோரிக்கை - ஜாக்டோ- ஜியோ அமைப்பு

எனவே அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தும் விதமாக ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் வருகின்ற 10ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்களை சந்தித்து எங்களது கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.

மேலும் தற்போது கோடைவெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறக்கும் தேதியை ஒருவார காலம் தள்ளிவைக்க வேண்டும்' என்றனர்.

Intro:மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு
பள்ளி திறக்கும் தேதியைதள்ளி வைக்க கோரிக்கை

Body:சென்னை, கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளி திறக்கும் தேதியை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என ஜாக்டோ ஜியோ கோரிக்கை விடுத்துள்ளது.
ஜாக்டோ ஜியோ வின் ஒருங்கிணைப்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தாஸ், அன்பரசு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடை தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளவர்களுக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் தேர்தலில் ஜனநாயகக் கடமையை முழுமையாக ஆற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தியபோது 8000 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது வழக்குகள் போடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பணப்பயன்கள் மற்றும் பதவி உயர்வு ,பணிமாறுதல் பெறுவதில் சிரமமாக உள்ளது. எனவே அதனை தமிழக முதல்வர் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசு செயலாளர்களை வரும் 10ம் தேதி சந்தித்து எங்களது கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். அதனை தொடர்ந்து வரும் 15ஆம் தேதி ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சுனாமி, மழை, புயல் போன்றவற்றின் பொது விடுமுறை அளிப்பது போல் பள்ளிகள் திறப்பதை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.