ETV Bharat / state

சென்னையின் முதல் நகரசபை கூட்டம்.. மாநகராட்சிக்கு முக்கிய கோரிக்கை!

சென்னை மாநகரில் முதல் முறையாக நடக்க உள்ள ஏரியா (அ) நகரசபை கூட்டம் குறித்து முழுமையாக பயிற்சி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 4, 2023, 8:53 PM IST

சென்னை: சென்னையில் இந்த மாதத்திற்குள் முதல் ஏரியா சபா நடைபெற உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், வார்டு உறுப்பினர்களுக்கும் ஏரியா (அ) நகரசபை கூட்டம் பற்றி முழுமையாக பயிற்சி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையில் முதல் முறையாக ஏரியா (அ) நகரசபை கூட்டம் நடத்த கடந்த மாமன்ற கூட்டத்தில் மாமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் ஒரு அதிகாரியும் அதுமட்டுமின்றி வார்டு கமிட்டி நபர்கள், ஒரு வார்டுக்கு 10 நபர்கள் என 200 வார்டிக்கு 2000 நபர்களை அந்த அந்த வார்டு கவுன்சிலர்கள் நியமித்தார்கள். அந்த விவரத்தை மாநகராட்சி அதன் இணையத்தளத்தில் (https://chennaicorporation.gov.in/gcc/AreaSabha/) வெளியிட்டது. 2000 நபர்களில் 170 மட்டுமே பெண் உள்ளனர் என்ற சர்ச்சையும் அப்போது எழுந்தது.

இது ஒருபக்கம் இருக்க இந்த மாதத்திற்குள் முதல் ஏரியா சபா நடைபெற உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், வார்டு உறுப்பினர்களுக்கும் ஏரியா (அ) நகரசபை கூட்டம் பற்றி முழுமையாக பயிற்சி வழங்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு மக்களின் குரல் என்ற அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் முதல் நகரசபை நடக்காததற்கு காரணம் என்ன?

இது தொடர்பாக அவர்கள் வெயிட்டுள்ள கோரிக்கையில், நகரசபை கூட்டங்களை நடத்துவதற்கான முன்நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகள் அடங்கிய விரிவான வழிகாட்டுதல்களை கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விரைவில் வழங்க வேண்டும். அதன் மூலம் அவர்களால் சரியான நேரத்தில் தயாராகி செயல்பட முடியும். பொதுமக்களின் தகவலுக்காக அந்த வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்.

சமீபத்தில் ஏரியாசபை மற்றும் வார்டுகமிட்டியின் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் ஏரியா சபா அறிமுகப்படுத்த நன்கு வடிவமைக்கப்பட்ட பயிற்சியை வழங்க வேண்டும். மேலும் மக்களிடம் ஏரியா (அ) நகரசபை கூட்டம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவும், அதில் அதிகபட்ச குடிமக்கள் பங்கேற்பை ஊக்குவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஓபிஎஸ், ஈபிஎஸ் என்ன செய்தாலும் உதயசூரியன் உதித்துக் கொண்டே இருக்கும்: அமைச்சர் மனோ தங்கராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.