ETV Bharat / state

மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம்: ஓரிரு நாட்களில் அறிக்கை..

மாணவி பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவக் குழுவின் முழு அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
author img

By

Published : Nov 16, 2022, 1:20 PM IST

சென்னை: கோட்டூர்புரத்தில் நீர் வழித்தடங்கள் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசு வலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களுக்கு கொசு வலைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வடகிழக்கு பருவமழையை ஒட்டி சென்னையில் நீர் வழித்தடங்கள் அருகில் வசிக்கும் மக்களுக்கு ரூ.2.60 ஆயிரம் மதிப்பிலான கொசு வலைகளை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் 23 ஆயிரம் குடும்பங்களுக்கு கொசு வலை வழங்கப்பட உள்ளது. பருவமழை காலத்தில் கொசுக்களால் பரவும் நோய்த் தொற்றுகளை தடுக்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மழைக்கால நோய்களை தடுப்பதற்காக 48,187 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன. பள்ளிகளில் 389 நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. 55 நாட்களில் நடத்தப்பட்ட முகாம்களில் 76 லட்சத்து 8 ஆயிரத்து 504 நபர்கள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக 55 நாட்கள் மருத்துவ முகாம் நடத்தப்படுவது இதுவே முதல்முறை.

மழைக்காலத்தை எதிர்கொள்ள பிளீச்சிங் பவுடர், குளோரின் கைத்தெளிப்பான், புகை பரப்பும் இயந்திரம் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களில் இருந்து பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இதுவரை ஐந்து நபர்கள் டெங்குவால் இறந்துள்ளனர்.

மாணவி பிரியா உயிரிழப்பில் வழக்கு பதியப்பட்ட பிறகே உடற்கூராய்வு செய்யப்பட்டது. மருத்துவர்களின் முதல் கட்ட அறிக்கையை வைத்துதான் கவனக்குறைவாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்தும் சட்ட ரீதியாகவும் தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவின் இறுதி அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.

மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தலைமறைவாக இருந்தால் அவர்களை காவல்துறை தேடி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்" எனத் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் மருத்துவத்துறை சீரழிந்து விட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அமைச்சர், "அண்மையில் குஜராத் மாநிலத்தில் தொங்கு பால விபத்தில் பலர் உயிரிழந்தனர். அப்பொழுது இது கடவுளின் விதி எனக் கூறி தப்பித்தது போன்று நாங்கள் செயல்படவில்லை. கவனக்குறைவு காரணமாக இது நடைபெற்றது என்ற தவறை உடனே தெரிவித்து, அதற்கு தீர்வு என்ற அடிப்படையில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு யார் செய்திருந்தாலும் அதனை வெளிப்படுத்தி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 13 பேரின் குடும்பத்திற்கு மேலும் ரூ.5 லட்சம் நிதியுதவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.