சென்னை: வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் யை நீக்குவது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் மற்றும் ஒரு சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் நத்தம் விஸ்வநாதன் பேசும் போது ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் பொதுக்குழுவில் சலசலப்பு ஏற்பட்டது.
சூழ்நிலையை சமாளிக்க உடனடியாக கே.பி.முனுசாமி எழுந்து பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நிச்சயம் பொதுச்செயலாளரால் ஓபிஎஸ்சை நீக்கும் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என கூறினார்.
ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என கூறி தொண்டர்கள் மத்தியில் மாஸ் காட்ட வேண்டும் என்று சி.வி.சண்முகம் தயாராகி இருந்தார். இந்த செய்தியை கே.பி.முனுசாமி கூறியதால் கடுப்பான சி.வி.சண்முகம் 'நான் தான் அதை கூற வேண்டும்' என எடப்பாடி மற்றும் ஜெயக்குமாரிடம் இது தொடர்பாக ஆவேசமாக பேசினார்.
இதனால், விழா மேடையில், சி.வி. சண்முகம் மற்றும் கே.பி.முனுசாமி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச்செயலாளர் அஸ்தஸ்து ரத்து! - பொதுக்குழுவில் நடந்த மாற்றம்