தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையாக திமுக வெற்றி பெற்றது. வரும் 7ஆம் தேதி முதல் முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.
புதிய அமைச்சரவையும் அன்றே பொறுப்பேற்கவுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான பொருள்கள் அனைத்தும் தலைமைச் செயலகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் அறைகளிலிருந்த அமைச்சர்களுக்கு பொருள்கள், பெயர் பலகைகள் ஆகியவை ஆட்டோ, லாரிகள் மூலம் அந்தந்த அமைச்சர்களின் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படங்களும் அடங்கும்.