இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், விண்ணவனூர் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் பச்சையப்பன் என்பவர் கிணறு ஆழப்படுத்தும் பணியின்போது, கயிறு அறுந்து விழுந்து உயிரிழந்தார்.
அரக்கோணம் வட்டம், பள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ரஜினி மற்றும் அவரது மகன் சிறுவன் தினேஷ் ஆகிய இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர். அன்னூர் வட்டம், அல்லப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது மகள் கவுரி மற்றும் தங்கராஜ் மகன் பிரதீப்குமார் ஆகிய 3 பேரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதுபோன்று பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ் மக்களுக்கு விஜய தசமி வாழ்த்துக் கூறிய முதலமைச்சர் பழனிசாமி