இது குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாட்டில் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 3 கோடியே 1 லட்சத்து 12 ஆயிரத்து 370 பேரும், பெண்கள் 3 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 603 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 ஆயிரத்து 385 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
புதிதாக 2 லட்சத்து 8 ஆயிரத்து 413 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆண்கள் 1 லட்சத்து ஆயிரத்து 700 பேர், பெண்கள் 1 லட்சத்து 6 ஆயிரத்து 581 பேர், மூன்றாம் பாலினத்தவர் 132 பேர்.
கோவை புதிய வாக்காளர்களை அதிகம் கொண்ட மாவட்டமாக உள்ளது. அங்கு மொத்தம் 15 ஆயிரத்து 165 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். குறைவான புதிய வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக அரியலூர் உள்ளது. அங்கு மொத்தம் ஆயிரத்து 22 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மொத்தம் 13 லட்சத்து 75 ஆயிரத்து 198 பேர் உள்ளனர். 80 வயதுக்கு மேல் அதிகபட்சமாக சென்னையில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 344 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 557 பேரும் உள்ளனர்.
அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக சோளிங்கநல்லூர் உள்ளது. அங்கு மொத்தம் 6 லட்சத்து 55 ஆயிரத்து 366 பேர் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 3 லட்சத்து 29 ஆயிரத்து 420 பேர். பெண்கள் 3 லட்சத்து 25 ஆயிரத்து 858 பேர். மூன்றாம் பாலினத்தவர் 88 பேர்.
குறைவான வாக்காளர் கொண்ட தொகுதி கீழ் வேலூர். இங்கு மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 107 பேர் வாக்காளர்களாக உள்ளனர். அவர்களில் ஆண்கள் 84 ஆயிரத்து 902 பேரும், பெண்கள் 88 ஆயிரத்து 205 பேரும், மூன்றாம் பாலினத்தவ வாக்காளர்கள் அற்ற தொகுதியாகவும் உள்ளது
மாவட்ட வாரியாக வாக்காளர்கள் நிலவரம்:
அதிகபட்சமாக சென்னையில் 3 லட்சத்து 94 ஆயிரத்து 704 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 11 ஆயிரத்து 627 பேரும் உள்ளனர்.
இன்று முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலக்கட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுடைய வாக்காளர்கள், பெயரை நீக்க விரும்புவோர், திருத்த விரும்புவோர், இடமாற்றம் விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 21 மற்றும் 22ஆம் தேதியும் அதைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதியும் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்கள் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளது.
இதுதொடர்பான விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் ஜனவரி 5ஆம் தேதி இறுதி செய்யப்பட்டு, ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்" எனத் தெரிவித்துள்ளது.