சென்னை அடுத்த ராஜகீழ்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ்வரி. இவருக்கு பிரசவவலி ஏற்பட்டதால் உறவினர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிசேரியன் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்து பிறந்தது. இதனையடுத்து லோகேஷ்வரியின் உறவினர்கள் குழந்தையின் உயிரிழப்பு குறித்து மருத்துவமனை அலுவலர்களிடம் காரணம் கேட்டுள்ளனர்.
அதற்கு அலுவலர்கள் பதிலளிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு தகராரில் ஈடுபட்டனர். இத்தகவலறிந்து வந்த சேலையூர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இருப்பினும், இருதரப்பினருக்கும் இடையே பலத்த வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. பின்னர் சமாதானம் செய்த காவல் துறையினர் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளாமல் குழந்தையின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: கணவனுடன் தகராறு - மனைவி இரு குழந்தைகளுடன் விஷம் குடித்த சோகம்