ETV Bharat / state

பூப்பறிக்க சென்ற சிறுமி பாலியல் வன்புணர்வு! - Relative arrested for sexually abusing a girl in Chennai

பூப்பறிக்க சென்ற சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.

பூப்பறிக்க சென்ற சிறுமி பாலியல் வன்புணர்வு; உறவினர் கைது!

author img

By

Published : Jan 12, 2022, 12:23 PM IST

சென்னையைச் சேர்ந்த 16 வயதான சிறுமி ஒருவர், தற்போது 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். சமீப காலமாக ஆண்களை கண்டாலே சிறுமிக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அச்சத்துக்கான காரணம் குறித்து பெற்றோர், சிறுமியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்போது 5ஆம் வகுப்பு படிக்கையில் பெரியப்பா முறை கொண்ட உறவினர் ஒருவர் தன்னை பல முறை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதிலிருந்தே உடல் நடுக்கம் வந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமிக்கு தைரியமளித்து நடந்தவை குறித்து கேட்டுள்ளனர். அப்போது உறவினரின் வீட்டு மாடிக்கு பூப்பறிக்க சென்றபோது பலமுறை பாலியல் வன்புணர்வுக்குள்ளானதாக சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் உறவினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது உறுதியானது.

தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர். சிறுமியின் உறவினரைக் கைது செய்தனர். தற்போது மாணவியை மீண்டும் இயல்பு நிலைக்கு திருப்பும் முயற்சிகளில் சமூக நலத்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பட்டுகோட்டையில் பூட்டிய காரை திறந்து நகை, பணம் கொள்ளை!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.