ETV Bharat / state

ஜெ. அன்பழகன் மறைவு: மருத்துவமனை அறிக்கை கூறுவதென்ன?

author img

By

Published : Jun 10, 2020, 10:27 AM IST

Updated : Jun 10, 2020, 10:54 AM IST

சென்னை: மறைந்த ஜெ. அன்பழகன் உயிரிழப்பு குறித்து அவர் சிகிச்சைப் பெற்றுவந்த ரேலா மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Rela hospital confirms death of J. Anbazhagan

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் கடந்த 2ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவம் அளிக்கப்பட்டுவந்தது.

அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, இன்று காலை ஜெ. அன்பழகனின் உயிர் பிரிந்தது. அவரின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், திமுகவினர், பொதுமக்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், ரேலா மருத்துவமனை ஜெ. அன்பழகன் உயிர் இழப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த ஜெ. அன்பழகனுக்கு இன்று காலை கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

கரோனாவிற்கு எதிரான அனைத்துத் தீவிர மருத்துவ நடவடிக்கைகளும் அவருக்கு அளிக்கப்பட்டன. இருந்தும், அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்காததால் இன்று காலை 08.05 மணிக்கு காலமானார்” என்று குறிப்பிட்டுள்ளது.

பிறந்த நாளிலேயே உயிரிழந்த ஜெ. அன்பழகன்: மருத்துவமனை அறிக்கை!
பிறந் நாளிலேயே உயிரிழந்த ஜெ. அன்பழகன்: மருத்துவமனை அறிக்கை!

ஜெ. அன்பழகன் 1958ஆம் ஆண்டு இதேநாளில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...'இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது' - ஜெ. அன்பழகன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

Last Updated : Jun 10, 2020, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.