ETV Bharat / state

சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்- வைகோ - தகுதி நீக்க கோரிக்கை

சென்னை: மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி அதிமுகவினர் வைத்துள்ள கோரிக்கையை பேரவைத் தலைவர் நிராகரிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

வைகோ
author img

By

Published : Apr 28, 2019, 6:40 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சிக்கு எதிராக செயல்படும் மூன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஆளும் கட்சி கொறடாவும், சட்ட அமைச்சரும் இணைந்து பேரவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர். இதைதொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களான ரத்தினசபாபதி, வி.டி கலைச்செல்வன், அ.பிரபு ஆகிய மூன்று பேருக்கும் உரிய விளக்கம் அளிக்க கோரி பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்த மூவரையும் தகுதி நீக்கம் செய்வதற்கான முன்னோட்டமாகவே இந்த நடவடிக்கைக் கருதப்படுகிறது. கட்சித் தாவல் சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசியல் சட்டத்தில் இடம் இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி அரசு பதவியில் நீடிப்பதற்காகவே பேரவைத் தலைவரிடம் ஆளும் கட்சியின் கொறாடா புகார் செய்து இருக்கிறார்.

சட்டமன்ற மரபுகளைப் பேணிக் காக்க வேண்டிய பேரவைத் தலைவர், ஆளும் கட்சியின் அரசியல் நோக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் ஜனநாயகம் புதை குழிக்குள் போய்விடும் என்பதை உணர்ந்து, மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கக் கோரிக்கையை ஏற்காமல் நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கக் கோரிக்கையை
பேரவைத் தலைவர் புறந்தள்ள வேண்டும் என வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை.

அவர் தன் அறிக்கையில் கூறியிருப்பது, அதிமுக மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளும் கட்சி கொறடாவும், சட்ட அமைச்சரும் சட்டமன்றத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்கள் ரத்தினசபாபதி, வி.டி.கலைச்செல்வன், அ.பிரபு ஆகிய மூவருக்கும் பேரவைத் தலைவர் நோட்டீசு அனுப்பி இருக்கின்றார். இவர்கள் மூவரையும் தகுதி நீக்கம் செய்வதற்கான முன்னோட்டமாகவே இந்த நடவடிக்கைக் கருதப்படுகிறது.
கட்சித் தாவல் சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசியல் சட்டத்தில் இடம் இருந்தாலும், எடப்பாடி பழனிச்சசாமி அரசு பதவியில் நீடிப்பதற்காகவே பேரவைத் தலைவரிடம் ஆளும் கட்சி கொறாடா புகார் செய்து இருக்கிறார்.
மே 23 ஆம் தேதி மக்களவை மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் எதிரானதாகவே இருக்கும் என்பது வெள்ளிடைமலையாகத் தெரிந்துவிட்டது.
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கப் போவது உறுதி ஆகிவிட்டது. எனவே எப்பாடு பட்டாவது பதவியை காப்பாற்றிக்கொள்வதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு, அரசியல் சட்ட நெறிமுறைகளைக் காற்றில்பறக்கவிட்டுவிட்டு, மேலும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறிக்கத் துடிக்கின்றது.
சட்டமன்ற மரபுகளைப் பேணிக் காக்க வேண்டிய பேரவைத் தலைவர், ஆளும் கட்சியின் அரசியல் நோக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் ஜனநாயகம் புதை குழிக்குப் போய்விடும் என்பதை உணர்ந்து, மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கக் கோரிக்கையை ஏற்காமல் புறந்தள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.