ETV Bharat / state

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம் - 6 பேருக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்த கூலித் தொழிலாளியின் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு

author img

By

Published : Oct 10, 2022, 6:25 PM IST

Updated : Oct 11, 2022, 7:10 AM IST

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கும்மிடிப்பூண்டி அடுத்த ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவலிங்கம் (42). இவரது மனைவி வீரம்மாள், இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும்
ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த 6 ஆம் தேதி இரவு 8 மணியளவில் தன் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி வேலைக்குச் செல்லும்போது ஆரம்பாக்கம் அருகில் நிலை தடுமாறி வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து எளாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அன்று இரவு 10.25 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (அக்.9) அதிகாலை 4.15 மணியளவில் மூளைச்சாவு அடைந்தார்.

அவரது உறவினர்களின் முழு சம்மதத்துடன் சிவலிங்கம் உடலிலிருந்து எடுக்கப்பட்ட கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கண்கள், இதய வால்வு ஆகிய உடல் உறுப்புகள் அரசு விதிமுறைப்படி தமிழ்நாடு அரசு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் மூலம் பதிவு செய்து காத்திருக்கும் தேவையான நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

உடல் உறுப்புகளை தானமாக அளித்த சிவலிங்கத்தின் உடலுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க:எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு இருக்கை தொடக்கம்

Last Updated : Oct 11, 2022, 7:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.