சென்னை: பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற சேவைகளின் கட்டணம் மாற்றி அமைக்கப்படவுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பதிவுச்சட்டம், 1908-இன் பிரிவு 78-இல் கட்டண விவர அட்டவணையில் உள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும் சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரை கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் 20 ரூபாயில் இருந்து 200 ரூபாய் எனவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் என மாற்றப்பட்டவுள்ளது.
-
வணிகவரி மற்றும் பதிவுத்துறை செய்தி வெளியீடு#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/uPqhfq51cR
— TN DIPR (@TNDIPRNEWS) July 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">வணிகவரி மற்றும் பதிவுத்துறை செய்தி வெளியீடு#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/uPqhfq51cR
— TN DIPR (@TNDIPRNEWS) July 8, 2023வணிகவரி மற்றும் பதிவுத்துறை செய்தி வெளியீடு#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/uPqhfq51cR
— TN DIPR (@TNDIPRNEWS) July 8, 2023
மேலும், அதிகபட்ச முத்திரை தீர்வை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் எனவும், தனி மனை பதிவிற்கான கட்டணம் 200 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் 10 ஆயிரம் ரூபாய் என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு விழுக்காடு எனவும் மாற்றியமைப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும். இவை, வரும் திங்கள் கிழையில் இருந்து (2023 ஜூலை 10) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "99% பெண்களுக்கு உதவி தொகை போய் சேர வாய்பே இல்லை" - கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி!