சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், 'தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை, தென் தமிழக கடற்கரைப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக குன்னூரில் 13 செ.மீ மழையும், ராமநாதபுரத்தில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ' குமரிக் கடல் பகுதிகளில் பலத்த சூறைக் காற்று மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்று மீனவர்கள் குமரி கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். சென்னை, அதன் புறநகரைப் பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: