ETV Bharat / state

நடிகர் விஷாலின் 'சக்ரா' படம் ஓடிடி-யில் வருமா?: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை: நடிகர் விஷாலின் "சக்ரா" படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் நடவடிக்கையை நிறுத்திவைக்க பிறப்பித்த உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்ற டிரைடெண்ட் ஆர்ட்ஸ் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

விஷாலின் சக்ரா படம்
விஷாலின் சக்ரா படம்
author img

By

Published : Sep 30, 2020, 6:31 PM IST

நடிகர் விஷால் - தமன்னா நடிப்பில் வெளியான "ஆக்‌ஷன்" என்ற படத்தை ரவீந்திரன் என்பவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாக ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதியளித்து ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆனால், விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்தாக கூறப்படுகிறது. இதற்கிடையே இயக்குநர் ஆனந்தன் என்பவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கதையை சொல்லி அதை படமாக எடுக்க ஒப்பந்தமும் செய்துள்ளார்.

இந்நிலையில், தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குநர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து 'சக்ரா' என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்த படத்தை ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

அதில், “ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி, விஷால் தர வேண்டிய 8.29 கோடி ரூபாய் பணத்துக்கான உத்தரவாதம் வழங்கும்படி விஷாலுக்கு உத்தரவிட வேண்டும். தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை வைத்து, வேறு நபருக்கு படமெடுத்த ஆனந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். அதுவரை "சக்ரா" திரைப்படத்தை ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (செப்.30) மீண்டும் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவத்திற்காக தான் நடித்த 'ஆக்‌ஷன்' திரைப்படம் போதிய லாபம் ஈட்டியுள்ளதாகவும், 'சக்ரா' திரைப்படம் தொடர்பாக தயாரிப்பாளர் ரவீந்திரனுடன் எந்த ஒப்பந்தமும் போடாததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், சக்ரா படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க பிறப்பித்த உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மனுதாரர் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மனுதாரர் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: நடிகர் விஷால், பெண் ஊழியர் மீது மோசடி புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.