சென்னை: கடந்த 4 நாள்களுக்கு முன்பு சென்னை அடையாறு பகுதியில் உள்ள சிவாஜி கணேசன் மணி மண்டபத்திற்கு முதலமைச்சர் மரியாதை செலுத்த சென்றிருந்த பொழுது, பாதுகாப்பு காரணமாக 25 நிமிடங்கள் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது.
அப்போது உயர் நீதிமன்ற நீதிபதி அனந்த வெங்கடேஷ் 25 நிமிடமாக காத்திருந்தார். இது குறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை செயலரிடம் நீதிபதி புகார் தெரிவித்தார்.
முதலமைச்சர் கான்வாய் வாகனங்கள் குறைப்பு
இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அப்பொழுது முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் 14 என்ற எண்ணிக்கையிலிருந்து 7 ஆக Advance car, pilot car, escort car, cm car, escort, jamer car, dipr car, spar car குறைக்கப்பட்டுள்ளன.
மேலும் மக்களின் வாகனங்களை நிறுத்தாமல் முதலமைச்சரின் வாகனமும் சேர்ந்தே செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குழிக்குள் விழுந்த யானை- 3 மணி நேரம் போராட்டம்..!