சென்னை உயர் நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில், வழக்கமாக பணியில் இருக்கும் ஊழியர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மெட்ரோ ரயில் புதிய ஊழியர்களை வைத்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று காலை திடீரென அவசர கால எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதால் பயணிகள் அலறி அடித்து வெளியே வந்தனர்.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் கேட்ட போது , தவறுதலாக யாரோ அவசர கால பொத்தானை அழுத்தியதாக விளக்கமளிக்கப்பட்டது.