ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நிக்கில் டேவிஸ் (32). இவர் சென்னை மதுரவாயல் வரலட்சுமி நகர் மெயின் ரோட்டில் வீடு எடுத்து வசித்துவருகிறார். அண்ணா நகரில் உள்ள தனியார் கால் சென்டரில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு ஜூலை 2ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் போனதால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றார்.
அவரை பரிசோதித்த மருத்துவர், கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில், இரு நாள்களாக அவரின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அதனால் அவரது நண்பர் வினோத், அவரின் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது அவரின் அறையிலிருந்து துர்நாற்றம் வீசியதால் கதைவை உடைத்துப் பார்த்துபோது அழுகிய நிலையில், அவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
அதையடுத்து, அவர் கோயம்பேடு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த வந்த காவல் துறையினர், நிகிலின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர். மேலும், அவரின் உடல் கரோனா பாரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் உயிரிழந்தவரின் உடல் தோண்டி எடுப்பு