ETV Bharat / state

நீதிமன்ற உத்தரவை மீறி பெற்றோர் இல்லாமல் மறு உடற்கூராய்வு; உயர் நீதிமன்றத்தில் மாணவி தந்தை தரப்பு வாதம் - உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

சின்ன சேலம் பள்ளி மாணவி உடலை மறு உடற்கூராய்வு செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 21) பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்ய அவரது தந்தை தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி பெற்றோர் இல்லாமல் மறு உடற்கூராய்வு; உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

author img

By

Published : Jul 21, 2022, 5:14 PM IST

சென்னை: சின்ன சேலம் அருகே மாணவி மரணமடைந்ததை அடுத்து, தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூராய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றத்தை தான் நாடுமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்ததையடுத்து இன்று (ஜூலை 21) காலை வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

இதையடுத்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா முறையீடு செய்தார் . அப்போது மறு உடற்கூராய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை அவசரம் கருதி விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அவரது முறையீட்டை ஏற்று நீதிபதி வழக்கை விசாரித்தபோது, அரசு தரப்பில், நீதிமன்றம் உத்தரவுப்படி மறு உடற்கூரய்வு முடிக்கப்பட்ட பிறகும், இன்னும் உடலை பெற்று கொள்ளவில்லை என்றும், அனைத்து நடைமுறைகளும் நீதிமன்ற உத்தரவுப்படி தான் நடைபெற்றுள்ளது என்றும் தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கையும் மனுதாரர் வாபஸ் பெற்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.

மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை மீறி பெற்றோர் மற்றும் வழக்கறிஞர் இல்லாமல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டதாகவும், தங்கள் தரப்பு மருத்துவர்கள் கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும், உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவை நாளை (ஜூலை 22) தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைத்துள்ளார். அதேசமயம், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மறு பரிசீலனை செய்ய போவதில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அனுமதி இன்றி நடத்தப்பட்ட மாணவியர் விடுதி: கள்ளக்குறிச்சி பள்ளி குறித்த அதிர்ச்சி தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.