ETV Bharat / state

கிரிக்கெட் ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் இல்லை - கிரிக்கெட் வீரர் அஸ்வின் - Online Cricket games

கிரிக்கெட் ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் இல்லை என்றும், அது கேம் ஆஃப் ஸ்கில் என்றும் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் இல்லை - கிரிக்கெட் வீரர் அஸ்வின்

author img

By

Published : Apr 11, 2023, 5:38 PM IST

சென்னை: 22 யார்ட்ஸ் மற்றும் ஜென் நெக்ஸ்ட் நிறுவனங்கள் கூட்டாக நடத்தும் கோடை கால சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து இன்று (ஏப்ரல் 11) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அஸ்வின், “வெளிநாடுகளில் ஒரு குழந்தை கிரிக்கெட் விளையாட நினைத்தால், அந்த வசதி இந்தியாவில் கிடைக்கிறதா என்றால், அது இல்லை.

நகர்புறத்தில் இருந்து கிரிக்கெட் விளையாட வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கிராமப்புறத்தில் இருந்து அதிக அளவில் கிரிக்கெட் விளையாட வருகிறார்கள். அதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளது. அதில் ஒன்று கார்ப்பரேட் கிரிக்கெட் அதிகரித்ததுதான். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கார்ப்பரேட்தான் அனைத்து விளையாட்டு மைதானத்திலும் விளையாடுகின்றனர். எனவே தற்போது, இந்த முகாம் மூலம் விளையாட்டு மைதானம் மற்றும் சிறந்த பயிற்சி உள்ளிட்டவை சிறப்பாக தர இருக்கிறோம். இனி நகர்புறத்தில் அதிக அளவில் திறமையானவர்கள் வருவார்கள்.

தற்போது அகாடமி மூலம் அனைத்துப் பணிகளும் நடைபெற்று வருகிறது. விளையாடுவதற்கு தற்போது இடம் கிடைப்பது கடினமாக உள்ளது. கிராமப்புறத்தில் இருந்து குழந்தைகள் வர, அனைத்து நடவடிக்கைகளையும் எங்கள் சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் முன்னெடுப்பது மட்டுமின்றி, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களும், மாணவர்களும் கிரிக்கெட் விளையாடுவதற்கு சென்னையில் போதிய மைதான வசதி இல்லை.

இது குறித்து விளையாட்டுத் துறை அமைச்சரிடம் முறையிடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால், நான் முறையிடுவேன். ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டு இருந்தால், அதை விளையாடாதீர்கள். நான் அதை விளையாடவில்லை. கிரிக்கெட் ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் இல்லை. அது கேம் ஆஃப் ஸ்கில் (Game of skill) என்று தான் கூறுகின்றனர்" என தெரிவித்தார்.

முன்னதாக நேற்று (ஏப்ரல் 10) தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார். இதனைத் தொடர்ந்து இது தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. மேலும் ஆன்லைன் விளையாட்டுகள் தடை பட்டியலையும் அரசு தயார் செய்யத் தொடங்கி உள்ளது.

இந்த தடை சட்டத்தால் ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடும் நபர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும். முன்னதாக ஆன்லைன் தடை சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்திய ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழர்கள் இல்லாத சிஎஸ்கே அணியை தடை செய்க - சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.