ETV Bharat / state

குரூப்-1 பதவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! - குரூப் 1 தேர்வு

குரூப்-1 பதவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC
TNPSC
author img

By

Published : Jul 19, 2022, 10:10 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட 66 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு நடைபெற்று இறுதித்தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தன.

இந்தநிலையில் தற்போது குரூப்-1 பதவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் உள்ள அனைத்து தேர்வர்களும் வரும் 29ஆம் தேதி அன்று ஆணைக்குழு அலுவலகத்தில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ள கலந்தாய்வில் பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தகவல் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட தேதியில் கலந்தாய்விற்கு வராத விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது எனவும் தேர்வாணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 12 ம் வகுப்பு துணைத் தேர்வு; நாளை முதல் ஹால் டிக்கெட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.