ETV Bharat / state

'பேரறிவாளன் தாயாரின் நீதி கேட்கும் பயணம் வெற்றி அடையட்டும்..!' - ராமதாஸ் வாழ்த்து - பேரறிவாளன்

சென்னை: "ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் மேற்கொள்ளும் நீதி கேட்கும் பயணம் வெற்றி அடையட்டும்" என, பாமக நிறுவனர் ராமாதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ramadoss
author img

By

Published : Feb 12, 2019, 2:27 PM IST

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அந்த 7 தமிழர்களையும், முன் விடுதலை செய்திட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு சிறப்பு தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், ஜெயலலிதா சிறை சென்றதை கண்டித்து 3 மாணவிகளை உயிருடன் எரித்த வழக்கில் கைதான 3 அதிமுக நிர்வாகிகளை முன் விடுதலை செய்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இவர்கள் 7 பேரை விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

ramadoss
ramadoss
undefined

இந்த நிலையில், 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், கோவையில் தொடங்கி தமிழகம் முழுவதும் நீதி கேட்கும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அற்புதம் அம்மாளின் இந்த பயணம் தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன் தாயாரின் நீதி கேட்கும் பயணம் வெற்றி அடையட்டும் என தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை மதித்து, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்திட ஆளுநர் உத்தரவிட என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Intro:Body:

https://www.dinamani.com/tamilnadu/2019/feb/12/7-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-3094389.html

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.