ETV Bharat / state

சென்னையில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மயக்கம் - அரசு செவி சாய்க்க ராமதாஸ் கோரிக்கை

author img

By

Published : Dec 28, 2022, 5:59 PM IST

ஊதிய முரண்பாட்டை அரசு கைவிட்டு, உண்ணாவிரதம் இருந்து வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை : ஊதிய முரண்பாட்டை களையக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டவர்கள் மயக்கம் அடைந்த நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (டிச.28) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் 6 பேர் இன்று காலை மயங்கியதைத் தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது.

31.05.2009ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு அடுத்த நாள் அதாவது 01.06.2009ஆம் நாள், முதல் பணியில் சேரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 எனக் குறைத்து நிர்ணயிக்கப்படுகிறது. இது நியாயமல்ல!

  • ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் 6 பேர் இன்று காலை மயங்கியதைத் தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது!(1/4)

    — Dr S RAMADOSS (@drramadoss) December 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அடிப்படை ஊதிய வேறுபாடு காரணமாக மொத்த ஊதியம் ரூ.15,500 வரை குறைகிறது. ஒரே நிலையில் கற்பித்தல் பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு பாகுபாட்டுடன் ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. இந்த பாகுபாட்டை போக்க வேண்டியது அரசின் கடமை.

ஊதிய முரண்பாட்டை களையக் கோரி, ஆசிரியர்கள் பத்தாண்டுகளாக போராடி வருகின்றனர். முந்தைய ஆட்சியில் இருமுறை அவர்கள் உண்ணாநிலை இருந்தபோது அவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இப்போதாவது, ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மேயர் பிரியா தலைமையில் 80-ல் 79 தீர்மானங்கள் நிறைவேற்றம்: என்னென்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.