இதுதொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், " சிதம்பரம் இராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டில் சேரும் மாணவர்களுக்கு அரசுக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முந்தைய ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் கல்லூரி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது இது நியாயமல்ல!
ஒரே கல்லூரியில் புதிதாக சேரும் மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.13,610 கட்டணம் செலுத்தும் நிலையில், 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்கள் ரூ.4 லட்சமும், அதற்கு முன் சேர்ந்தவர்கள் சில ஆண்டுகளுக்கு ரூ. 4 லட்சம், சில ஆண்டுகளுக்கு ரூ.5.44 லட்சம் செலுத்துவது என்ன நியாயம்?
ஏற்கனவே சேர்ந்த மாணவர்களுக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகளுக்கு மட்டும் தான் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அரசுக்கு இது பெரும் சுமையல்ல. இந்த சுமையையும் அரசு ஏற்றுக் கொண்டு, மாணவர்களுக்கான கட்டணத்தை ரூ.13,610 ஆக குறைக்க வேண்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.