ETV Bharat / state

'ரயில் மோதி தொழிலாளர்கள் 14 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது'

author img

By

Published : May 9, 2020, 12:46 PM IST

சென்னை: மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத்தில் சரக்கு ரயில் மோதி வெளிமாநிலத் தொழிலாளர்கள் 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

Ramadass  ராமதாஸ் ட்வீட்  புலம்பெயர்ந்து தொழிலாளர்கள்  பட்டாளி மக்கள் கட்சி
'ரயில் மோதி வெளிமாநிலத் தொழிலாளர்கள் 14 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது'

கரோனா தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு நடந்தே செல்லத் தொடங்கினர். இந்த ஊரடங்கினால், குடிபெயர்ந்த தொழிலாளர்களே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவிலிருந்து சத்தீஸ்கருக்கு வெளிமாநிலத் தொழிலாளர்கள் நடந்துசென்றுள்ளனர். அப்போது, ஏற்பட்ட கலைப்பினால், அவுரங்காபாத் ரயில் பாதையில் படுத்து உறங்கியுள்ளனர். அப்போது, சரக்கு ரயில் ஒன்று அவர்கள் மீது மோதியதில் 14 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Ramadass  ராமதாஸ் ட்வீட்  புலம்பெயர்ந்து தொழிலாளர்கள்  பட்டாளி மக்கள் கட்சி  தொழிலாளர்கள் ரயில் விபத்து
ராமதாஸ் ட்வீட்

இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "மராட்டிய மாநிலத்தில் அவுரங்காபாத் அருகே சரக்கு ரயில் மோதி வெளிமாநிலத் தொழிலாளர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது.

தொழிலாளர்கள் நாள் கொண்டாடப்படும் மே மாதத்தில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்னல்களும் இழப்புகளும் மிகவும் வேதனையளிக்கின்றன" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'மாநிலத்தின் நிதி நிலை பற்றி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.