ETV Bharat / state

பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்! - சென்னை செய்திகள்

PMK Ramadoss: பெயர்ப் பலகைகளில் 50 சதவீத தமிழ் இல்லாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் பெயர்ப்பலகைகளில் தமிழ் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பெயர்ப்பலகைகளில் தமிழ் இல்லாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 1:56 PM IST

சென்னை: இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (டிச.26) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் பிப்ரவரி மாதத்திற்குள் கன்னட மொழியில் மாற்றப்படவில்லை என்றால், அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.

கர்நாடக வணிகத்தில் கன்னடமே ஆட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஒரு மாநிலத்தில், குறிப்பாக மாநிலத்தின் தலைநகரத்தில் உள்ள கடைகளின் பெயர்ப்பலகைகள் அனைத்தும் அந்த மாநிலத்தின் மொழியில் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அந்த வகையில், பெங்களூரு மாநகராட்சியின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது.

பெங்களூருவுடன் தமிழ்நாட்டையும், சென்னை மாநகரத்தையும் ஒப்பிடும்போது நிலைமை கண்ணீரை வரவழைக்கும் வகையில்தான் உள்ளது. 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி 575 எண் கொண்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ‘‘எல்லா நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும். பிறமொழிகள் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆங்கில வரிகள் இரண்டாம் இடத்திலும், ஏனைய மொழிகள் அதற்கு அடுத்தும் வர வேண்டும்.

பெயர்ப்பலகைகளில் பிற மொழிகளைப் பயன்படுத்தும்போது தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகளுக்கான இடங்கள் 5:3:2 என்ற அளவில் இருக்க வேண்டும். பெயர்ப் பலகையிலுள்ள எழுத்துக்கள் சீர்திருத்த வரி வடிவில் இருக்க வேண்டும்’’ என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அதன் பிறகு 46 ஆண்டுகள் ஆகியும் அந்த அரசாணையில் 5 சதவீதம் கூட செயல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. தமிழில் பெயர்ப்பலகைகளை அமைத்தாலும் பெரும்பான்மையான வணிகர்கள் அதற்கு தயாராக இல்லை. கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாகத் தான் பெயர்ப்பலகைகளில் அன்னை தமிழ் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

எனவே, பெங்களூரு மாநகராட்சியைப் போன்று தமிழ்நாடு அரசும் இதில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பெயர்ப்பலகைகளில் 50 சதவீதம் தமிழ் இல்லாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் பெயர்ப்பலகைகளில் தமிழ் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். உலகத்தாய் மொழி நாளான பிப்ரவரி 21ஆம் நாளுக்கும் இதை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு - பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.