சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், ”தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
கரோனா தொற்று வேகமாக பரவத்தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
கரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டிருப்பதால், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் பயிலரங்கில் நடத்தப்பட்டு வந்த ஆய்வுக் கூட்டங்களும், பயிற்சி வகுப்புகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. அவற்றுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
கரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து தகவல் அறிந்த ஏராளமானோர் அன்பின் மிகுதியால் என்னிடம் நலம் விசாரிப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர். அவர்களிடம் பேச முடியாதது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது!
-
#COVID19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அய்யா @drramadoss அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன். https://t.co/vtejLRzJzn
— M.K.Stalin (@mkstalin) July 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#COVID19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அய்யா @drramadoss அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன். https://t.co/vtejLRzJzn
— M.K.Stalin (@mkstalin) July 13, 2022#COVID19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அய்யா @drramadoss அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன். https://t.co/vtejLRzJzn
— M.K.Stalin (@mkstalin) July 13, 2022
நான் நலமாக இருக்கிறேன். எனது உடல்நிலை தேறி வருகிறது. அடுத்த சில நாட்களில் முழுமையாக நலம் பெற்று விடுவேன். எனவே, பாட்டாளி சொந்தங்கள் உள்ளிட்ட அனைவரும் இது குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்!” எனத்தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ராமதாஸின் உடல்நிலை குறித்து ட்விட்டரில் நலம் விசாரித்துள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!