ETV Bharat / state

’ எனது கோரிக்கையை கலைஞர் நிறைவேற்றவில்லை’ - மருத்துவர் ராமதாஸ் - chennai latest news

பள்ளிகளில் தமிழ் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நிறைவேற்றவில்லை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்
ராமதாஸ்
author img

By

Published : Jun 12, 2021, 6:27 PM IST

சென்னையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எழுதிய தமிழ் இசையின் சிறப்புகள் குறித்த ’இசையின் இசை’ எனும் நூல் வெளியீட்டு விழா இன்று (ஜூன்.12) காலை 10.30 மணிக்கு இணையவழியில் நடைபெற்றது.

நூலை பத்மஸ்ரீ கலைமாமணி சீர்காழி கோ. சிவசிதம்பரம் வெளியிட, மக்கள் இசைக் கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி பெற்றுக்கொண்டார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், “தமிழ் இசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும். தமிழ்நாட்டில் விரைவில் காலம் மாறும். தமிழ் மொழி தழைக்கும் காலம் வரும். இசை தமிழர்களின் வாழ்க்கையுடன் கலந்தது. விவசாயத்தில் நாற்று நடுதல், களை எடுத்தல், ஏற்றம் இறைத்தல் என அனைத்துக்கும் தனித்தனி பாடல்கள் உண்டு. தமிழ் இசைதான் உலகின் ஆதி இசை ஆகும்.

ஒரு காலத்தில் எழுச்சி பெற்றிருந்த தமிழ் இசை இருபதாம் நூற்றாண்டில் வீழ்ச்சி அடைந்தபோது, தமிழ்நாட்டில் இருவருக்கு மட்டும்தான் கோபம் ஏற்பட்டது.

ஒருவர் ராஜா. சர். அண்ணாமலை செட்டியார், மற்றொருவர் பின்னாளில் இந்தியாவின் முதலாவது நிதியமைச்சராக பதவி வகித்த ஆர்.கே.சண்முகம் செட்டியார் ஆகியோர் ஆகும். அவர்கள் இருவரும்தான் தமிழ் இசை சங்கத்தை உருவாக்கி, தமிழ் இசையை பரப்ப நடவடிக்கை எடுத்தனர். விழாவில் பாடுவதற்கு தமிழ் இசைக் கலைஞர்கள் எவரும் வரவில்லையானால், நாமே தமிழ் இசை பாடல்களை பாடலாம் என்று துணிச்சலாக அறிவித்தனர்.

அவர்கள் நடத்திய இசை விழா சிறப்பாக நடைபெற்றது. அதனால் தமிழ் இசை காப்பாற்றப்பட்டது. சங்க இலக்கியங்களில் தமிழ் இசை பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. சிலப்பதிகாரத்தில் 103 பண்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. பரிபாடலில் தமிழ் இசைப்பாடல்கள் ஏராளமான உள்ளன.

தமிழ் இசையை குழந்தைப் பருவத்திலிருந்தே படிக்க வேண்டும். அதற்காகத்தான் பள்ளிகளில் தமிழ் இசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று, மறைந்த திமுக முன்னாள் முதலமைச்சர் கலைஞரிடம் கோரிக்கை வைத்தேன். அதுவும் தமிழ் இசைப் பாடத்திற்கு தேர்வு வைத்து, அதில் வெற்றி பெற்றால் மட்டும்தான், தேர்ச்சி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். ஆனால், அதனை அவர் நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டில் தமிழை வளர்ப்பதற்காக என்னென்னவோ செய்தோம். ஆங்காங்கே அறிவிப்பு பலகைகளை அமைத்து அவற்றில் தனித்தமிழ் சொற்களை எழுதி வைத்தோம். தனித்தமிழ் சொற்களை மட்டுமே வசனமாக பேசும் வகையில் இலக்கணம் என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டோம்.

செந்தமிழில் இசைப்பாடல் இல்லையெனச் செப்புகின்றீர், மானமின்றிப் பைந்தமிழில் இசையின்றேல் பாழுங்கிணற்றில் வீழ்ந்துயிரை மாய்த்த லன்றி எந்தமிழில் இசையில்லை, எந்தாய்க்கே உடையில்லை என்ப துண்டோ? உந்தமிழை அறிவீரோ தமிழறிவும் உள்ளதுவோ உங்கட் கெல்லாம்? என்று பாரதிதாசன் கடுமையாக விமர்சித்தார். ஆனாலும் பயனில்லை” என்று ராமதாஸ் தெரிவித்தார்.

இதில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, பாமக சட்டப்பேரவை உறுப்பினர்கள், இசைக்கல்லூரி பேராசிரியர் கோ.செங்கல்வராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : 'டெல்டா செழித்தால் தமிழ்நாடே செழிப்படையும்!' - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.