ETV Bharat / state

மாநிலங்களவைக்கு எம்.எம். அப்துல்லா போட்டியின்றி தேர்வு - Dmk candidate MM Abdullah

மாநிலங்களவைக்கு திமுக வேட்பாளர் எம்.எம். அப்துல்லா போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

எம்.எம். அப்துல்லா போட்டியின்றி தேர்வு
எம்.எம். அப்துல்லா போட்டியின்றி தேர்வு
author img

By

Published : Sep 1, 2021, 6:16 PM IST

சென்னை: ராஜ்ய சபா எம்.பி.,யாக இருந்த அதிமுகவைச் சேர்ந்த முகமது ஜான் மறைவையடுத்து அந்த இடத்தை காலி இடமாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதேபோல் அதிமுக சார்பில் எம்.பி.,யாக இருந்த கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் எம்எல்ஏக்கள் ஆனதால் தங்களது எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர். எனவே காலி இடங்களை நிரப்புவதற்கான மாநிலங்களவை இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கிடையே மாநிலங்களவைக்கான தேர்தலை தனித்தனியாக நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை வைத்தது. அதன்படி, முதல்கட்டமாக செப்டம்பர் 13ஆம் தேதி ஒரு காலி இடத்திற்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து திமுக சார்பில் அக்கட்சியின் வெளிநாடு வாழ் இந்திய நல அணியின் இணை செயலாளர் எம்.எம். அப்துல்லா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

அதிமுக போட்டியிடவில்லை

இதனையடுத்து அவர் சட்டப்பேரவை செயலர் சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதிமுகவிற்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அதிமுக சார்பில் யாரும் போட்டியிடவில்லை.

பரிசீலனையும் நிராகரிப்பும்

இன்று (செப்.1) நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் திமுக வேட்பாளர் எம்.எம். அப்துல்லாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.

சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்த அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், பத்மராஜன், மதிவாணன் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத காரணத்தால் மாநிலங்களவைக்கு எம்.எம். அப்துல்லா போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கு... எடப்பாடி பயப்பட அவசியமில்லை - டிடிவி தினகரன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.