ETV Bharat / state

'மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது' - thirumavalavan press meet

சென்னை: மருத்துவர்களின் நான்கு கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அவ்வாறு செய்வதால் அரசுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது எனவும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

thol.thirumavalavan
author img

By

Published : Oct 25, 2019, 7:23 PM IST

Updated : Oct 25, 2019, 11:12 PM IST

காலமுறை ஊதியம், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் வந்து ஆதரவளித்தார்.

மருத்துவர்களுக்கு ஆதரவளித்த திருமாவளவன்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "காலமுறை சம்பளம், பதவி உயர்வு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பதை திருத்தி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று மாற்ற வேண்டும். இதற்கான அரசாணை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. எனவே அதனை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். அரசு மருத்துவர்கள் பட்டமேற்படிப்பு படிக்க 50 விழுக்காடு என்றிருந்த இட ஒதுக்கீடு தற்போது இல்லை. அதனை திரும்பக் கொண்டுவர வேண்டும். பட்டமேற்படிப்பு முடித்த பின்பு மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்திதான் மருத்துவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்த நான்கு கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதால் அரசுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அரசு இதில் மெத்தனம்காட்டுவது அதிர்ச்சியளிக்கிறது. ஆகவே, மருத்துவர்களை அழைத்து அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி இந்த நான்கு முக்கியக் கோரிக்கைககளை நிறைவேற்றித் தர வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்தார்.

Intro:Body:காலமுறை ஊதியம், பதிவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறறைவேற்ற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் காலவரம்பற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் நேரில் வந்து ஆதரவளித்தார்.

அப்போது பேசிய அவர், " அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதிலும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட முயற்சித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பது இவர்களின் நோக்கமல்ல.

காலமுறை சம்பளம் மற்றும் பதிவி உயர்வு 20 ஆண்டுகளுக்கு ஒரு புறை என்றிருப்பதை திருத்தி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று மாற்ற வேண்டும். தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்திலே இந்த அரசாணை வெளியிடப்பட்டது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், அரசு மருத்துவர்கள் பட்டமேற்படிப்பு படிக்க 50 விழுக்காடு என்றிருந்த இடஒதுக்கீடு தற்போது இல்லை. எனவே அதை திரும்பக்கொண்டு வர வேண்டும். பட்டமேற்படிப்பு முடித்த பின் மருத்துவர்களை கலதாய்வு வைத்து பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் போன்ற 4 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நான்கு கோரிக்கைகளும் நிறைவேற்றுவதால் அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. அரசு இதில் மெத்தனம் காட்டுவது அதிர்ச்சியளிக்கிறது. ஆகவே மருத்துவர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி இந்த நான்கு முக்கிய கோரிக்கைககளை நிறைவேற்றி தர வேண்டும்" என்று தெரிவித்தார்.

Conclusion:
Last Updated : Oct 25, 2019, 11:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.