ETV Bharat / state

கருணாநிதி முன் ரஜினி பேசிய பெரியாரின் ‘பகுத்தறிவு’ - அன்றும் இன்றும் ஒரு ரீவைண்ட்! - rajini speech against periyar

2007ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, பெரியார் குறித்து ரஜினி பேசிய கருத்துகளை தற்போதைய அரசியல் சூழலில் மீண்டும் நினைவுக்கூர வேண்டியுள்ளது.

ரஜினி கலைஞர்
ரஜினி கலைஞர்
author img

By

Published : Jan 24, 2020, 3:20 PM IST

Updated : Jan 24, 2020, 3:52 PM IST

2020 புதிய வருடம் தொடங்கி 14 நாட்கள் கடந்திருந்தன. துக்ளக் இதழின் பொன்விழா கொண்டாட்டத்திற்காகத் தயார் நிலையில் இருந்தது கலைவாணர் அரங்கம். வருடா வருடம் நடைபெறும் வழக்கமான ஆண்டு விழாவாக அல்லாமல், பொன்விழா ஆண்டு என்பதால் எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே இருந்தது. விழாவில் ரஜினி கலந்துகொண்டு பேச இருக்கிறார் என்ற உற்சாகம் துக்ளக் வாசகர்களிடையே ததும்பியது.

துக்ளக் விழா மேடை
துக்ளக் விழா மேடை

இதற்கிடையே மேடையேறிப் பேசத் தொடங்கிய ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் சேலத்தில் நடைபெற்ற கடவுள் மறுப்பு மாநாட்டில், இந்து மதக் கடவுள்களான ராமர் - சீதாவின் படங்கள் ஆடையின்றி எடுத்துவரப்பட்டு காலணிகளால் தாக்கப்பட்டதாகவும், இந்த செய்தியை துக்ளக் இதழ் மட்டுமே பிரசுரித்ததாகவும் ஏகபோகத்துக்கு புகழ்ந்து தள்ளினார். அதுமட்டுமின்றி இதனால் அப்போதைய திமுக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதாகவும், அதனால் முடக்கப்பட்டிருந்த துக்ளக் இதழை, அன்றைய காலக்கட்டத்தில் 10 ரூபாய்க்கு பதிலாக 50 ரூபாய் விலை கொடுத்து வாசகர்கள் வாங்கிச் சென்றதாகவும் ‘உண்மை’களை வாரி இறைத்தார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகும் துக்ளக் இதழின் விலை ரஜினியின் கூற்றுப்படி ஐந்து ரூபாய் மட்டுமே அதிகரித்து 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது தனிக்கதை.

துக்ளக் விழாவில் ரஜினி பேச்சு
துக்ளக் விழாவில் ரஜினி பேச்சு

ரஜினியின் இந்தப் பேச்சுக்கு எதிர்வினைகள் ஏற்படாமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியம். வழக்கம்போல் திராவிடர் கழகத்தினரும் பெரியாரியவாதிகளும் இது உண்மை அல்ல, ரஜினி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார் என்றும், வரலாற்றைத் திரிக்க முயன்றதற்கு ரஜினி மன்னிப்பு கோர வேண்டும் எனவும் கோரிக்கைகளை எழுப்பினர். மேலும், அப்படி ரஜினிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் மனு

சூழலின் தீவிரத்தை உணர்ந்த ரஜினி, அந்தப் போராட்டம் குறித்து ‘அவுட்லுக்’ இதழில் வெளியானதாக சில நகல்களை செய்தியாளர்கள் முன் காண்பித்து, தான் பேசியதில் தவறில்லை என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார். மேலும், இந்த விவகாரத்தில் தன்னால் மன்னிப்பு கேட்க இயலாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஒருவேளை ரஜினி கூறிய சம்பவங்கள் உண்மையில் நடைபெற்றிருக்குமாயின் துக்ளக் ஆவணக் காப்பகத்தில் இருந்து அந்தத் தேதியில் வெளியான துக்ளக் செய்தியை ஆதாரமாகக் காட்டியிருக்க வேண்டியதுதானே என்று ரஜினிக்கு செக் வைக்கின்றனர் எதிர்த்தரப்பினர்.

‘தொண்டு செய்து பழுத்த பழம் - துயதாடி மார்பில் விழும்’
‘தொண்டு செய்து பழுத்த பழம் - தூயதாடி மார்பில் விழும்’

இதுஒருபுறமிருக்க, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் போன்ற அரசியல் தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு பெரியார் செய்த சேவைகளை எண்ணிப்பார்த்து யோசித்து வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று ரஜினிக்கு வெளிப்படையாக அறிவுரைகளைக் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: பெரியாருக்கு எதிரான ரஜினியின் போர் வெல்லுமா?

இந்தச் சூழலில் 2007ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகள் குறித்து ரஜினி பேசியது தற்போதைய சூழலில் மீண்டும் நினைவுகூர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் 2005-06ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா. ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு. கருணாநிதி திரைத்துறையினருக்கு விருதுகளை வழங்குகிறார். பெரும் நட்சத்திரப் பட்டாளமே கலந்துகொண்ட நிகழ்ச்சி அது. சந்திரமுகி படத்துக்காக ரஜினிக்கு சிறந்த நடிகர் விருது.

கலைஞர் - ரஜினி
கலைஞர் - ரஜினி

அந்த விழாவில் மைக்கைப் பிடித்த ரஜினி, அப்போது உச்சத்தில் இருந்த சேதுசமுத்திர விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு ரூ. 95 லட்சம் நிதியுதவி வழங்கி, திராவிடர் கழகம் தயாரித்து வெளியிட்டிருந்த ‘பெரியார்’ திரைப்படம் வெளியாகியிருந்த சமயம். இந்தப் படம் தனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியதாகவும், பெரியார் மீது அதுவரை இருந்த மதிப்பு ஆயிரம் மடங்கு அதிகரித்திருப்பதாகவும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணிக்கு ரஜினி கடிதம் எழுதியிருந்தார்.

இதையும் படிங்க: #HBDperiyar141: பெண்களின் அடிமை விலங்கை உடைத்த பெரியார்!

இந்த நிலையில் விழாவில் பேசிய ரஜினி, ‘பெரியார் திரைப்படத்தை நீங்கள் வரவேற்கலாமா என்று சிலர் என்னிடம் கேட்டனர். அவர்கள் யார் என்பதை இங்கே நான் சொல்ல விரும்பவில்லை. பெரியார் ஒரு விருந்து மாதிரி. அந்த விருந்தில் பலவிதமான பண்டங்கள் இருக்கும். அவரிடம் கடவுள் எதிர்ப்பு கொள்கை மட்டுமா இருக்கிறது? தீண்டாமை, சாதி ஒழிப்பு என எத்தனையோ நல்ல கொள்கைகள் இருக்கிறதே. நான் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை எடுத்துக்கொள்ளாமல் நல்ல கொள்கைகளை எடுத்துக்கொண்டேன். பத்துவிதமான பண்டங்களில், எனக்குப் பிடித்த பண்டங்களை எடுத்துக் கொண்டேன். பெரியார் படம் பார்த்து பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்!’ என்றார். ரஜினியின் இந்தப் பேச்சைக் கூர்ந்து கவனித்தபடியே மேடையில் அமர்ந்திருந்தார் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி.

இதையும் படிங்க: ஈவேராவை ‘பெரியார்’ ஆக்கிய அன்னை மீனாம்பாள்!

இந்த விழாவும் ரஜினி பெரியார் புகழ் பாடுதலும் ஒருபுறம். மற்றொரு சுவாரஸ்ய நிகழ்வும் ரஜினியின் திரைப்பாதையில் பெரியாரால் நடந்தேறியிருக்கிறது. அதாவது தனது சொந்தத் தயாரிப்பில் வெளியான பாபா திரைப்படத்தில், நாத்திகனாக இருக்கும் ரஜினி ஆத்திகனாக மாறுகையில் வரும் ஒரு பாடலில், ‘திருமகன் வருகிற திருநீரை நெற்றி மீது தினம் பூசி, அதிசயம் அதிசயம் பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி’ என ஒரு வரி இடம்பெற்றிருக்கும். இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பவே, கேசட்டில் இந்த வரிகளை நீக்க இயலாது என்றும், ஆனால் படத்தில் இந்த வரிகள் வராமல் பார்த்துக்கொள்வதாகவும், கி. வீரமணிக்கு எடுத்துக் கூறி பிரச்னையை முடித்தார் ரஜினி.

பெரியார்
பெரியார்

இந்த நிகழ்வை ஒரு விழாவில் குறிப்பிட்டுப் பேசிய ரஜினி, பாபா திரைப்பட விவகாரத்தில் தான் கூறியதை ஏற்றுக்கொண்டு பகுத்தறிவுடன் அதனை அணுகினார் கி. வீரமணி என்று கூறினார்.

இவ்வாறாக திராவிடர் கழகத்துடனும், பெரியாரிய உணர்வாளர்களிடமும் தனது இயல்பின் மூலம் நற்பெயருடன் வலம்வந்த ரஜினிக்கு தற்போது பெரியாரை சீண்ட வேண்டிய அவசியம் என்ன என்பதும், மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவே முடியாது என்ற திட்டவட்டமோ திடீரென வருவதற்கான தேவை என்ன என்பதையும் காலம்தான் உணர்த்தும்!

இதையும் படிங்க: பெரியார் ஏன் இன்றும் தேவைப்படுகிறார்?

Last Updated : Jan 24, 2020, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.