ETV Bharat / state

ஒரே படப்பிடிப்பு தளத்தில் ஷூட்டிங்! வேங்கையன் மகனும் - வேலு பாயும் சந்திப்பு!

Rajinikanth and Kamal Hassan meeting: சென்னையில் இந்தியன் 2 மற்றும் தலைவர் 170 ஆகிய இரு படங்களின் படப்பிடிப்புகளும் ஒரே இடத்தில் நடைபெற்றதால் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து தங்களது அன்பை பரிமாற்றிக் கொண்டனர்.

Rajinikanth and Kamal Hassan meeting
படப்பிடிப்புத் தளத்தில் வேங்கை மகனைச் சந்தித்த வேலுநாயக்கர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 9:42 PM IST

படப்பிடிப்புத் தளத்தில் வேங்கை மகனைச் சந்தித்த வேலுநாயக்கர்

சென்னை: இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம் “இந்தியன் 2”. இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

அதேபோல், இயக்குநர் கே.ஈ.ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “தலைவர் 170”. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், தற்போது சென்னையில் ஒரே அரங்கில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பும், தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பும் அருகருகே நடைபெற்று வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு ஒரே இடத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரின் படப்பிடிப்புகளும் நடந்ததால், இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து தங்களது அன்பை பரிமாற்றிக் கொண்டனர்.

முன்னதாக, கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ரஜினிகாந்த், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று கமல்ஹாசனைச் சந்திக்க வருவதாகத் தெரிவித்துள்ளார். இதனையறிந்த கமல்ஹாசன் “என் நண்பனைச் சந்திக்க நானே வருகிறேன்” என உடனடியாக தலைவர் 170 படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று ரஜினிகாந்த்க்கு சர்ப்ரைஸ் கொடுத்து உள்ளார். கமல்ஹாசனைக் கண்ட ரஜினிகாந்த் மகிழ்ச்சியில் கட்டித்தழுவிக் இருவரும் தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.

இந்தியத் திரையுலகின் மாபெரும் உச்ச நட்சத்திரங்களின் இந்த நட்பும், அன்பும், படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களை பிரமிக்க வைத்தது. முன்னதாக பாபா, பஞ்சதந்திரம் போன்ற படங்கள் இதே இடத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது.

அப்போது, இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இருவரும் ஒரே படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளனர். இந்நிகழ்வின் போது Head of Lyca Productions GKM தமிழ் குமரன் மற்றும் Red Giant Movies Co Producer M.செண்பகமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: "நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல..." - நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிபதி எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.