சென்னை அதிமுக தலைமை அலுவலகம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுகவில் ரஜினி மக்கள் மன்றத்தினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 350 பேர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்!