ETV Bharat / state

ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி கல்வி கட்டண விவகாரம்: அமைச்சர் மா.சு சொன்ன கறார் பதில்!

author img

By

Published : Apr 21, 2022, 8:30 PM IST

கடலூர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி கல்விக்கட்டணங்கள் மேலும் குறைக்க வாய்ப்பு இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 21) கடலூர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கோரிக்கையான கல்வி கட்டணத்தைக்குறைக்க வேண்டும் என்பது தொடர்பாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி பேரவை உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர்.

இதற்குப்பதிலளித்துப்பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'கல்லூரியில் சேரும்போது எம்பிபிஎஸ் படிப்புக்கு 5 லட்சத்து 44 ஆயிரத்து 370 ரூபாய் என்றும் பிடிஎஸ் படிப்புக்கு 3 லட்சத்து 45 ஆயிரம் செலுத்துகிறோம் என்று ஒப்புக்கொண்டே மாணவர்கள் சேர்ந்தனர்.

ஒப்புக்கொண்ட கட்டணத்தை செலுத்தியே தீர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு வாதம் வைத்தது. கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று மாணவர்கள் போராடியபோது திமுக, மாணவர்களுக்கு அப்போது ஆதரவு தெரிவித்தது.

ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி கல்வி கட்டண விவகாரம்: மா.சு சொன்ன கறார் பதில்

அதன்படி திமுக ஆட்சிக்கு வந்த பின் எம்பிபிஎஸ் படிப்புக்கு 5,44,370 ரூபாயிலிருந்து ரூ.1,44,000 குறைக்கப்பட்டு ரூ.4 லட்சமாக கட்டணம் உள்ளது. அதேபோல், பிடிஎஸ் படிப்புக்கு ரூ.3,45,000இல் ரூ.95,000 குறைக்கப்பட்டு ரூ.2,50,000 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.119.888 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி கல்வி கட்டணங்கள் மேலும் குறைக்க வாய்ப்பு இல்லை' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கட்டணத்தைக் குறைக்க ராமதாஸ் வலியுறுத்தல்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.