ETV Bharat / state

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தினால் கருக்கலைப்புகள் அதிகமாக நடைபெறும் - டாக்டர்கள் சங்கம் கவலை - Raising age marriage women 21 will lead more abortions

பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்தினால் கருக்கலைப்புகள் அதிகமாக நடைபெறும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தினால் கருக்கலைப்புகள் அதிகமாக நடைபெறும் - டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயலாளர்

author img

By

Published : Jun 12, 2022, 9:49 AM IST

சென்னை : சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ரவீந்திரநாத் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றத்தின் மாநில பொது செயலாளர் த. அறம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலில் பேசிய தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொது செயலாளர் த.அறம், "தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில மாநாடு சாத்தூரில் மே 21,22,23 தேதிகளில் நடைபெற்றதாகவும் அந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் திரும்பப்பெற வேண்டும். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை இந்தி சமஸ்கிருத தினிப்பை செய்கிறது.இந்துத்துவ பண்பாட்டை உள்ளே திணித்து அதன் மூலம் ஜாதியை உள்ளே நிலை நிறுத்துகிற வகையில் குலத்தொழிலை வலியுறுத்துகிறது.

கல்வியை முழுமையாக வணிக மயமாக்கி கார்ப்பரேட் மயமாகும் இந்த காரணங்களால் இதை திரும்ப பெற வேண்டும். கல்வி என்பது பொது பட்டியலில் உள்ளது அதை முழுமையாக மத்திய அரசின் பட்டியலுக்கு மாற்றி மாநில உரிமையை பறிக்கும் வகையில் இந்த கல்விக் கொள்கை உள்ளது. எனவே இந்த தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த கூடாது திரும்பப் பெற வேண்டும்.

நவீன அறிவியல் மருத்துவத்தை மத்திய அரசு ஒழிக்கும் நோக்கத்தோடு செயல்படுகிறது மூடநம்பிக்கையை வலிந்து திணிக்கிறார்கள். ஆயுர்வேத மருத்துவத்தை இந்து மருத்துவமாக முத்திரை குத்தி அதை இந்திய மருத்துவம் ஆக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

ஒருங்கிணைந்த மருத்துவம் என்ற பெயரில் நவீன விஞ்ஞான மருத்துவத்தையும் ஆயுர்வேத மருத்துவத்தையும் இணைத்து நவீன அறிவியல் மருத்துவத்தை பின்னோக்கி கொண்டு செல்கின்ற முயற்சி.மத்திய அரசு காவி மயமாக்கும் மருத்துவ கொள்கையை கைவிட வேண்டும்.

பெண்களின் திருமண வயதை 21 ஆக மாற்றும் பொழுது பல்வேறு சமூக பொருளாதார சிக்கல்கள் உண்டாகும். இது ஜாதியவாதிகளுக்கும், ஆணாதிக்கவாதிகளுக்கும், மதவாதிகளுக்கும் ஆதரவாக இருக்கும். பெண்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை கல்வியை இலவசமாக வழங்க வேண்டும்.

வேலைவாய்ப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு தனியார் மற்றும் அரசுத் துறைகளில் பெண்களுக்கு வழங்க வேண்டும்.இதனால் பெண்களின் திருமண வயதை அவர்கள் தாமாகவே தள்ளிப்போட முடியும்” என பேசினார்.

இதை தொடர்ந்து பேசிய மாநில செயலாளர் மருத்துவர் சாந்தி, “இந்தியாவில் பெண்களின் சராசரி திருமண வயது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பெண் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகிறது. திருமண வயதை 21 ஆக உயர்த்துவதால் கருக்கலைப்புகள் அதிகமாக நடைபெறும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்த வேண்டும் என்பது சரியா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.