முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை குறைத்த பிறகும், தமிழ்நாடு முழுவதும் அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரவியது.
இதையடுத்து அவ்வாறு விற்பனை செய்பவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் ஆவடி. சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் தெரிவித்ததாவது, "பால் முகவர்கள், சில்லறை வணிகர்களுக்கு ஆவின் பால் விற்பனை கமிஷனாக லிட்டர் ஒன்றுக்கு வெறும் ஒரு ரூபாய் முதல் ஒரு ரூபாய் 50 காசுகள் வரை மட்டுமே இடைத்தரகர்களால் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் சில இடங்களில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையிலேயே பால் முகவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுவே ஆவின் பால் தமிழ்நாடு முழுவதும் அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்யப்படுவதற்கு பிரதான காரணமாகி விடுகிறது" என்றார்.
இந்நிலையில் ஆவின் பால் அதிக விலைக்கு விற்பனையாவதைத் தடுக்க பால் முகவர்களுக்கு நேரடி வர்த்தக தொடர்பும், கமிஷன் (லாபம்) தொகையும் வழங்க வேண்டுமென பால்வளத்துறை அமைச்சருக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: ஆவின் பாலகத்தில் கைவரிசை காட்டிய நபர் கைது!