அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அரியலூர், கரூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் தமிழ்நாட்டின் அரியலூர், கரூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். மீதமுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யகூடும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... கனமழையால் வீடு இடிந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!