ETV Bharat / state

'சென்னை வழியாக வடமாநிலத்திற்கு செல்லும் அனைத்து ரயில்களும் திருப்பி அனுப்பப்படும்' - முதன்மை கோட்ட பாதுகாப்பு ஆணையர்

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக வட மாநிலங்களில் கலவரம் வெடித்துள்ளதால், சென்னை வழியாக வடமாநிலத்திற்குச் செல்லும் அனைத்து ரயில்களும் திருப்பி அனுப்பப்படுவதாக ரயில்வே பாதுகாப்பு படையின் மூத்த முதன்மை கோட்ட பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமரன் தெரிவித்துள்ளார்.

சென்னை வழியாக வடமாநிலத்திற்குச் செல்லும் அனைத்து ரயில்களும் திருப்பி அனுப்பப்படும்

author img

By

Published : Jun 18, 2022, 7:52 AM IST

சென்னை: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களான பீகார், ஜார்கண்ட் உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதன் காரணமாகப் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. ரயிலுக்கு தீ வைக்கப்பட்டும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனால் வடமாநிலத்திற்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

தெலங்கானா மாநிலத்தில் ரயில் மறியல் போராட்டம் மற்றும் ரயில் தீ வைப்பு காரணமாக சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. பெங்களூரிலிருந்து சென்னை பெரம்பூர் வழியாகப் பீகார் மாநிலத்தில் உள்ள தானாப்பூருக்கு செல்லக்கூடிய சங்கமித்ரா விரைவுவண்டி பாதுகாப்பு கருதி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

சென்னை வழியாக வடமாநிலத்திற்கு செல்லும் அனைத்து ரயில்களும் திருப்பி அனுப்பப்படும்

இதன் காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையம் வட இந்தியர்களால் நிரம்பி வழிந்தது, பலர் தற்போது உள்ள நிலைமை சீரானதும், வடமாநிலங்களுக்குச் செல்வதாகவும் அதுவரை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கியிருக்க முடிவு செய்து பலர் ரயில்வே நிலையத்திலேயே தங்கியுள்ளனர். வட மாநிலங்களில் நிலவும் கலவரம் காரணமாக ரயில்வே நிர்வாகம் சுமார் 3000 பயணிகளுடன் இருந்த சங்கமித்ரா ரயிலை மீண்டும் புறப்பட்ட இடமான பெங்களூருக்கு திருப்பி அனுப்பினர்.

ரயில் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்தால் சென்ட்ரல் ரயில்வே நிலையம் பதினொன்றாவது நடைமேடையில் காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படையின் மூத்த முதன்மை கோட்ட பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அக்னிபாத் பிரச்சனை தொடர்பாக வட மாநிலங்களில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த ரயில் பாதுகாப்பு கருதி புறப்பட்ட இடமான பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும் சென்னை வழியாக வடமாநிலத்திற்குச் செல்லும் அனைத்து ரயில்களும் திருப்பி அனுப்பப்பட இருப்பதாக தெரிவித்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் 25க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக்கூடிய வட இந்திய பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து அவர்களும் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "அக்னிபாத் திட்டம் இளைஞர்கள் மீதான அரசாங்கத்தின் அக்கறையை காட்டுகிறது"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.