ETV Bharat / state

'பறவைகளின் தாகத்தை தீர்க்க ரயில்வே காவல் துறை புதுமுயற்சி'

author img

By

Published : Oct 19, 2019, 6:21 AM IST

சென்னை: ரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் பறவை, செல்லப்பிராணிகளின் தாகத்தை தீர்க்கும் வகையில்,ரயில்வே காவல் துறை சார்பில் சென்னை எம்ஜிஆர் ரயில்நிலையத்தில் தண்ணீருடன் கூடிய பெரிய குவளைகள் வைக்கப்பட்டது.

தண்ணீர் வைக்கும் காவல்துறையினர்

கோடை காலங்களில் பறவைகள் மற்றும் விலங்குகளின் தாகம் தீர்க்கும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையங்களில், விலங்கு நல ஆர்வலர்கள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்ட குவளைகள் வைக்கப்பட்டது.

மேலும், ரயில் நிலையங்களிலும் பறவைகள் மற்றும் செல்லப்பிராணிகள் சுற்றித்திரிவதால், அவை தங்களுக்கு தாகம் ஏற்படும் போது ரயில் நிலையத்திலும், அதன் சுற்றுப்புறத்திலும் தேங்கியுள்ள தண்ணீரை குடித்து வருகின்றன.

தண்ணீர் வைக்கும் காவல்துறையினர்
தண்ணீர் வைக்கும் காவல்துறையினர்

இந்நிலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள், அவற்றிற்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆலோசனையின் பேரில் தமிழ்நாட்டில் 58 ரயில்வே காவல் நிலையங்களில் பறவைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு தண்ணீர் நிரப்பப்பட்ட குவளைகள் வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் தண்ணீர் குவளைகள் வைத்தனர். இதில் எம்ஜிஆர் ரயில்நிலைய துணை கண்காணிப்பாளர் முருகன், ஆய்வாளர்கள் தாமஸ் ஏசுதாசன், வேலு, சிவனேசன் ஆகியோர் கலந்து கொண்டு, பறவைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்காக தண்ணீர் நிரப்பிய குவளைகளை ரயில்வே காவல் நிலையத்தில் வைத்தனர்.

தண்ணீர் வைக்கப்பட்டுள்ள குவளைகள்
தண்ணீர் வைக்கப்பட்டுள்ள குவளைகள்

மேலும் பெரம்பூர், அரக்கோணம் உள்ளிட்ட ரயில்வே காவல் நிலையங்களுக்கும் தண்ணீர் குவளைகளை வழங்கினர். பின்னர் ரயில்வே டி.எஸ்.பி முருகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பறவைகள் மற்றும் செல்லப்பிராணிகளின் தாகத்தை தீர்க்க விலங்குகள் நல ஆர்வலர் சாய் விக்னேஷூடன் இணைந்து சுத்தமான தண்ணீர் நிரப்பிய குவளைகளை ரயில் நிலையத்தில் வைத்துள்ளோம்.

இந்த தண்ணீரில் கொசுக்குகள் தேங்காத அளவுக்கு பார்த்துக் கொள்ளப்படும். மேலும் பறவைகள் மற்றும் விலங்குகள் தண்ணீர் குடித்து செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்,’’ என்றார்.

இதையும் படிங்க:தாகம் தீர்க்க குடிநீரின்றி 15 குரங்குகள் உயிரிழந்த சோகம்!

Intro:Body:ரயில் நிலையத்தில் பறவைகளுக்காக குவளையில் தண்ணீர் வைத்த ரயில்வே காவல்துறை.

தமிழகத்தில் தண்ணீரின்றி பல பறவைகள் இறக்க நேரிடுகின்றன.

தண்ணீர் வைத்து பறவைகள் மற்ற உயிரினங்களை பாதுகாக்க ரயில்வே போலீசார் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

பறவைகள் உயிரினங்களும் இயற்கை சூழலியலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பச்சை நிற கோப்பைகளில் பறவைகள் உயிரினங்களின் தாகத்தை தணிக்க தண்ணீர் ஊற்றும் ரயில்வே போலீசார்.

சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் பறவைகள் மற்றும் உயிரினங்களை பாதுகாக்கும் முயற்சியாக ரயில் நிலையங்களில் தண்ணீரை கோப்பைகளில் வைக்கும் நிகழ்ச்சியை ரயில்வே துணை கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்ல கூடிய ஒரு சுறுசுறுப்பான ரயில் நிலையமாக செயல்பட்டு வருகிறது

இந்த மக்கள் கூட்டம் அதிகமான சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் பறவைகளையும் உயிரினங்களையும் கருத்தில் கொண்டு அவைகளை பாதுகாக்கும் முயற்சியில் வெளிப்பாடாக ரயில் நிலையங்களில் முக்கியமான பகுதிகளில் மிகப்பெரிய கோப்பைகளில் தண்ணீர் ஊற்றி வைத்து உயிரினங்களின் தாகத்தை தணிக்கும் முயற்சியை ரயில்வே போலீசார் தொடங்கி வைத்தனர்

இயற்கை சூழியியலில் ஒவ்வொரு உயிரினமும் மிக முக்கியமான பணிகளை செய்து வருகிறது பறவைகளும் உயிரினங்களும் மனிதன் வாழ்வதற்கு மிக முக்கியமான காரணியாக திகழ்ந்து வருவதால் அவர்களை பாதுகாக்க வேண்டியது நமது முக்கியமான கடமைகளில் ஒன்று என ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசும்போது தெரிவித்தார்

சென்ட்ரல் ரயில்வே நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில்வே நிலையத்தினுள் உளள் ரயில்வே பாதுகாப்பு காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மிகப்பெரிய கோப்பைகளில் பறவைகள் மற்றும் உயிரினங்களின் தாகத்தைத் தணிப்பதற்காக சுத்தமான நீரை ஊற்றி வைத்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.