சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விளையாட்டுத் துறை சார்பாக மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பரிசுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "வெற்றி பெற்ற வீரர்களுக்கு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தத் தேர்தலிலும் திமுக கூட்டணியான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். ராகுல்காந்தி மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி மக்களைச் சந்தித்து அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
பிப்ரவரி மாதம் இறுதியில் மீண்டும் ராகுல் காந்தியை தமிழ்நாட்டிற்கு அழைத்து இருக்கிறோம், அவர் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் எங்கு பரப்புரை மேற்கொள்வார் என்பதை விரைவில் அறிவிக்கிறேன். டெல்லியில் அமைதியாக நடந்த டிராக்டர் பேரணியை பாஜக அரசு தங்களது காவலர்களை வைத்து கலவரமாக மாற்றியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விவசாயிகள் நினைத்திருந்தால் முதல் வாரத்திலேயே கலவரத்தை உருவாக்கி இருக்கலாம். ஆனால், அவர்கள் அமைதியாக காத்திருந்தார்கள். விவசாயிகள் பெயரை அவமதிப்பு அதற்காக மத்திய பாஜக அரசு இந்தக் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் விவசாயத்தின் சத்தியே கடைசியில் வெற்றி பெறும்" என்றார்.
இதையும் படிங்க: ஈழத்தமிழர் இனப்படுகொலை! மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!